க்ரைம்

மாணவர்கள் இடையே திடீர் மோதல்... வாகனத்தை அடித்து நொறுக்கி ஆவேசம்...

கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதுடன் உணவு விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

Malaimurasu Seithigal TV

சிவகங்கை : மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரு தரப்பினர்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது ஆவரங்காட்டை சேர்ந்த மாணவர்களுக்கும் பூவந்தியை சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து மன்னர் கல்லூரி நிர்வாகம்  அழைத்து பேசி கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த   சிலர் வெளியில் வந்து மீண்டும் தகராறு செய்து உள்ளனர்.  இது தொடர்பாக பூவந்தியை சேர்ந்த கல்யாணசுந்தரம் தனது மகன் பொன்சக்தி உட்பட 7 ஏழு பேருடன் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு  அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது திருப்பாச்சேத்தி சேர்ந்த 10 பேர் கொண்ட மாணவர்கள் அவர்கள் வந்த கார் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி ஹோட்டலில் புகுந்து அரிவாள் கம்பு ஆயுத்தில்  தாக்குதல் நடத்தினார்கள். இதில் கல்யாண சுந்தரம் அவரது மகன் பொன்சக்தி உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் முடித்து ஆவரங்கட்டை சேர்ந்த கும்பல் தப்பி ஓடியது சம்பவம் சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு அருகிலே நடந்ததால் உடனடியாக காவல்துறை வந்து காயம் அடைந்தவர்களை 108 மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடய  கும்பலை தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்ட மிகுந்த பகுதி பகுதியில் அரிவாள் கம்பு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.