க்ரைம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... ஓராண்டு பிறகு கிடைத்த நீதி...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று பேர் கூட்டுப் பால்யல் செய்த கொடூரம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது. குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை : எடையகோட்டை பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் வயது 56 அண்ணாதுரை வயது 41 ஆகிய 2 நபர்களும், கடந்த 2021ம் ஆண்டு, மார்ச் மாதம் 3ம் தேதி அன்று ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 24 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதோடு நிறுத்தாமல் தொடர்ந்து மேலும் பலமுறை அப்பெண்னை இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக, 2021ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி அன்று ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், குற்றசம்பவத்தில் ஈடுபட்டதாக ராஜேந்திரன் அண்ணாதுரையையும் இவர்களுக்கு முழுமையாக உடந்தையாக இருந்ததாக அஞ்சலை மீதும் என மூன்று நபர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கானது மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த மகிளா நீதிமன்ற நீதிபதி Dr.R.சத்யா சம்பந்தப்பட்ட 3நபர்களும் குற்றவாளி என்றும் 3 நபர்களுக்கும் 31 ஆண்டு கால சிறை தண்டனையும் 2 லட்சத்து 1000 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

கூட்டு பாலியல் செய்த ராஜேந்திரன் அண்ணாதுரைக்கு தலா 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும் தொகையை கட்ட தவறினால் ஒரு ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பெண் மீது கூட்டு உடந்தை குற்றவாளி என்ற பிரிவில் அதே 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் ஒன்னரை லட்சம் ரூபாய் அபராதமும் அதை கட்ட தவறினால், மேலும் ஒரு ஆண்டு கால தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்ததாக மூன்று நபர்களுக்கும் தலா  10 வருட கடங்காவல் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அழைத்து வந்ததாக 3 நபர்களுக்கும் தலா ஒரு வருட கருங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் 3 நபர்களுக்கும் தனித்தனியாக விதித்தார்.

மேலும் இந்த தண்டனை மூன்று நபர்களும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி டாக்டர் சத்யா மேலும் இழப்பீடு தொகையை மனநலம் பாதிக்கப்பட்ட நபரில் இடம் மூன்று நபர்களும் தனி தனியாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார் இதை எடுத்து சம்பந்தப்பட்ட மூன்று நபர்களையும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.