நாங்கள் இந்துக்கள், அப்பாவிகள் - பில்கிஸ் வழக்கு குற்றவாளி...

இந்துக்கள் என்பதால் நாங்கள் அப்பாவிகள் என பில்கிஸ் பனோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதேஷ்யாம் ஷா தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்துக்கள், அப்பாவிகள் - பில்கிஸ் வழக்கு குற்றவாளி...

கடந்த 2002ம் ஆண்டு 21 வயது கர்ப்பிணியான பில்கிஸ் பனோ என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை நன்னடத்தை காரணமாக சமீபத்தில் குஜராத் அரசு விடுவித்தது. இந்நிலையில், பில்கிஸ் பனோ வாழ்ந்த அதே சாலையில் குற்றவாளி ராதேஷ்யாம் ஷா, தற்போது பட்டாசுக் கடையை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க | பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகள் விடுதலை.. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

மற்றொரு குற்றவாளி கோவிந்தனை, சிறையில் இருந்து வெளியேறிய பின் சாட்சிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,இந்துக்கள் என்பதால் நாங்கள் அப்பாவிகள் என தெரிவித்துள்ளார்.

ராஜூபாய் சோனி என்பவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பில்கிஸ் பனோ வாழ்ந்த வீட்டை, இந்துப்பெண் துணிக்கடை நடத்த அவர் வாடகைக்கு விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் உத்திரபிரதேசம்!!!