க்ரைம்

டெலிவரி ஊழியரை சிதைத்த லாரி டிரைவர் தப்ப முயற்சி...

ஆர்டர் செய்த உணவினை டெலிவரி செய்ய போகும் போது லாரி மோதி ஊழியர் பரிதாபமாக இறந்தார். தப்பி ஓட முயன்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலிசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

வடசென்னை எர்ணாவூரில் இருந்து சாத்தாங்காடு நோக்கி செல்லும் பகுதிகளில் பெரும்பாலும் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நிற்கும். சில நேரங்களில் மோசமாக முந்தியும் போகும்.

அப்படி இன்று மதியம் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவினை zomato ஊழியர் டெலிவரி செய்ய செல்லும போது சத்தியமூர்த்தி நகர் பகுதியில் லாரி உரசி தடுமாறி கீழே விழுந்த போது லாரியின் டயர் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

பின், விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுனர், அப்படியே லாரியை நிறுத்தி வாகனத்தை விட்டு தப்பி ஓட முயன்றிருக்கிறார். அவரை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 30 வயதான முகமது அலி என்பது தெரியவந்தது. லாரியை விட்டு தப்பி ஓடிய லாரியின் ஓட்டுநரான திருவாரூர் மாவட்டத்தை சேரந்த சதா டிரான்ஸ்போர்ட்டின் விஜயகுமாரை சாத்தாங்காடு போலிசார் கைது செய்துள்ளனர்.

உணவு டெலிவரி செய்ய போகும் போது ஊழியருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் பகுதியின் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சாத்தாங்காடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.