பா.ஜ.க அரசு சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்டவர்களை வஞ்சிக்கிறது - காங்கிரஸ்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க அரசினைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பா.ஜ.க அரசு   சிறுபான்மையினர், தலித், பிற்படுத்தப்பட்டவர்களை வஞ்சிக்கிறது   -  காங்கிரஸ்

சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது மற்றும் மத்தியப் பல்கலைக் கழகத்தில் நிரப்பப் படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி SC துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் நடைபெற்றது.வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே.எம்.எச் ஹசன் மௌலானா கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும் படிக்க |  அதிமுக ஒரு கட்சியே இல்ல பாஜக ஜெயிக்காது -ஒரே பாலில்........ அதிமுகவின் குற்றங்களை புத்தகங்களோடு வெளியிட தயாராகும் திமுகவின் கோவை செல்வராஜ்

பாசிச ஆட்சிக்கு சாவுமணியடிக்க வேண்டும்

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்,காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்கார்ஜூன கார்கே அவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி யின் அறிவுரையின் படியும்   நாடு முழுவதும்  காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியிருப்பதாகவும், சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி சிறுபான்மையினரையும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் பா.ஜ.க அரசு வஞ்சிப்பதாகவும் அதனைக் கண்டித்தும்,மத்தியப் பல்கலைக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரியும் பா.ஜ.க வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும்,அதன் சிறிய முன்னெடுப்பாக எஸ்.சி துறை சார்பில் இன்று சென்னையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா அவர்களின் தலைமையில் தொடங்கியிருப்ப
தாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க |  ஆர்பாட்டத்தின் போது பாண்லே பூத் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு


சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தப்படுவதால் மாணவர்களின் கல்விக்கு தடையாக பா.ஜ.க  வின் ஆட்சி இருப்பதாகவும்.
இதுவரை பல்கலைக் கழகங்களில் 3,011 காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பதாகவும்,

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் கண்டன ஆர்ப்பாட்டங்களால் மோடியின் பாசிச ஆட்சிக்கு சாவுமணியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.