ஆர்பாட்டத்தின் போது பாண்லே பூத் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு...

பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி சமூக அமைப்பினர் ஆர்பாடத்தில் ஈடுபட்டு பாண்லே பூத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தின் போது பாண்லே பூத் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, 200-க்கும் மேற்பட்ட பால் பூத்துகளும் இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக பாண்லே பால் போதுமான அளவு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும், பாண்லே நிறுவனத்தை முடக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் நிர்வாகியை உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சமூக அமைப்புகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் மிஷன் வீதியில் உள்ள பாண்லே அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு மற்றும் பாண்லே நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சிறிது நேரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரிய கடை காவல் நிலைய காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்துவந்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் பால் பூத் மீது கல்லை விசியத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டி உடைந்தது. தொடர்ந்து அனைவரையும் கலைய செய்த காவல்துறையினர், கல்லை வீசி கலவரம் ஏற்பட்டத முயன்ற சைமன் என்ற நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com