ரன்களை குவித்த ஆஸ்திரேலியா...அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்தியா...2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பின்னிலையா?

ரன்களை குவித்த ஆஸ்திரேலியா...அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்தியா...2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பின்னிலையா?
Published on
Updated on
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதில் ரோகித் சர்மா 15 ரன்களும், சுப்மன் கில் 13 ரன்களும், விராட் கோலி 14 ரன்களும், புஜாரா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஜடேஜா -  ரஹானே இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜடேஜா 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 29 ரன்களும், பரத் 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணி 318 ரன்கள் பின்னிலையில் விளையாடுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com