கிணற்றில் இருந்து 3 நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்...!

கிணற்றில் இருந்து 3 நாள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்...!

மத்தியப்பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமிக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் உள்ள முங்காவல்லி கிராமத்தில் உள்ள பண்ணை நிலத்தில் கடந்த ஜூன் 6-ம் தேதி  சிருஷ்டி குஷ்வாஹா என்ற இரண்டரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அதைத் தொடர்ந்து ராணுவத்தினர், தேசிய மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 

தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வந்த நிலையில், குஜராத்திலிருந்து ரோபோடிக் நிபுணர் குழுவினரும் வரவழைக்கப்பட்டு  மீட்புப் பணி தீவிரப்படுத்தபட்டது. இதனையடுத்து, குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.

இதையும் படிக்க : ”இந்திய நிறுவனங்களுக்கு செர்பியா ஒரு சிறந்த நுழைவாயிலாக மாறும்” திரவுபதி முர்மு!

மீட்கப்பட்ட குழந்தை மயக்க நிலையில் இருப்பதாகவும், குழந்தையின் இதயத்துடிப்பு, மூளை ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்பதை மருத்துவர்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், எவ்வளவு முயற்சி செய்தும் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும், மருத்துவர்கள் பரிசோதனையில் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்ததாகவும், அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இச்சம்பவம் குறித்து  செய்தியாளா்களிடம் பேசிய  மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாயக் அவஸ்தி, குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, விவசாய நிலத்தின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணற்றிற்கு காரணமான நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என கூறினார். 

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்த குழந்தைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.