13வது சட்டதிருத்தத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு என்ன.... மக்கள் எதிர்ப்பது ஏன்?!!

13வது சட்டதிருத்தத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு என்ன.... மக்கள் எதிர்ப்பது ஏன்?!!

இலங்கையில் 13ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து,  புத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்தியா- இலங்கை:

1987ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

13வது சட்டதிருத்தம்:

  • தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுக்கு சில உரிமைகளை வழங்குவதற்கும் இது திட்டமிடுகிறது.

  • இந்த திருத்தமானது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதை உறுதிப்படுத்துகிறது.

  • சிங்களம் மற்றும் தமிழை தேசிய மொழிகளாக செயல்படுத்துவதையும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடரும் போராட்டம்:

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை இந்த சட்டத்திருத்தம் அளிக்கிறது.  இந்த நிலையில், இச்சட்டத்திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடந்து வருகிறது. மேலும், பல துறவிகளை போலீசார் கைது செய்துள்ளதால் இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சென்னையில் தொடரும் பனிமூட்டம்.... மக்கள் அவதி!!!