சென்னையில் தொடரும் பனிமூட்டம்.... மக்கள் அவதி!!!

சென்னையில் தொடரும் பனிமூட்டம்.... மக்கள் அவதி!!!

இன்னும் சில நாள்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், மூன்றாவது நாளாக சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னையை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி உள்ளிட்ட மூன்று மாதங்களும் சென்னையில் பனிமூட்டம் தொடர்ந்து காணப்படும்.

அடுத்த 5 தினங்களுக்கு சென்னையில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கணித்திருந்தாலும், தொடர்ந்து இன்று 3ஆவது நாளாக அதிகாலையில் சென்னையில் பனிமூட்டம் அதிக அளவில் உள்ளது.

நகர மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என்றும் மேலும், அடுத்த சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:    ஓட்டுநர்களே பொறுப்பு.... மாணவர்கள் மீது புகாரளிக்கலாம்!!