கடலில் மூழ்கிய கப்பல்...31 பேர் காணவில்லை...

கடலில் மூழ்கிய கப்பல்...31 பேர் காணவில்லை...

தாய்லாந்து வளைகுடாவில் பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் காரணமாக ராயல் தாய் கடற்படையின் HTMS சுகோதை கார்வெட் கப்பல் மூழ்கியது.  நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் பிரசுவாப் கெரி கான் மாகாணத்தில் உள்ள பாங்சாஃபான் மாவட்டத்தில் உள்ள ஜெட்டி பகுதியில் இருந்து 32 கி.மீ தொலைவில் கடலில் போர்க்கப்பலான சுகோதை கார்வெட் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் தெரிந்துகொள்க:   கடலில் மூழ்கிய கப்பல்...பயணித்தவர்கள் நிலை என்ன?!!!

கடலில் மூழ்கிய தாய்லாந்து கடற்படையின் கப்பலில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்த நிலையில் தற்போது 31 பேரை காணவில்லை.  அவர்களில் 75 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.  தொடர்ந்து அவர்களை தேடும் பணி கடலில் நடைபெற்று வருகிறது.  மூன்று கடற்படை கப்பல்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் நிவாரண பணிக்காக அனுப்பபட்டுள்ளது.  இருப்பினும் அதிக அலைகள் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஆயுதப்படைகளுக்கான கொள்முதல் திட்டங்கள்....உள்நாட்டு கொள்முதலே இலக்கு!!!