ஆயுதப்படைகளுக்கான கொள்முதல் திட்டங்கள்....உள்நாட்டு கொள்முதலே இலக்கு!!!

ஆயுதப்படைகளுக்கான கொள்முதல் திட்டங்கள்....உள்நாட்டு கொள்முதலே இலக்கு!!!

Published on

உள்நாட்டு மயமாக்கலுக்கும், உள்நாட்டு வளங்களில் இருந்து பாதுகாப்பு பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உள்நாட்டு கொள்முதல்:

கடந்த 3 ஆண்டுகளில் ஆயுதப்படைகளுக்கான பல்வேறு வகை மூலதன கொள்முதல் திட்டங்களின் கீழ் ரூ.2,46,989 கோடி மதிப்பிலான 163 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.   மேலும், இவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ததற்கான பங்கு எனவும் இனிவரும் காலங்களில் இதன் வீதம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

68 சதவீதமே இலக்கு:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வகையான மூலதன கொள்முதல் வகைகளின் கீழ் பல்வேறு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அஜய் பட் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர் உள்நாட்டு மயமாக்கல் மற்றும் உள்நாட்டு வளங்களில் இருந்து பாதுகாப்பு பொருட்களை கொள்முதல் செய்வதில் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று கூறியுள்ளார்.  

அதற்கான காரணமாக 2018-19 முதல் 2021-22 வரை கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டுமே வெளிநாட்டு பாதுகாப்புக் கொள்முதல் செலவை உள்நாட்டு கொள்முதலால் 46% லிருந்து 36% ஆகக் குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  இந்த ஆண்டு வெளிநாட்டு பொருள்களின் இறக்குமதியை 68 சதவீதமாக குறைப்பதே இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com