விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் அதிபர்...

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிபர் ‘மைத்ரிபால சிறிசேன’ கலந்து கொண்டார்.

விவசாயிகள் போராட்டத்தில் முன்னாள் அதிபர்...

ஹபரணை - மட்டக்களப்பு பிரதான வீதியின், பொலனறுவை பகுதியில், விவசாயிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துக்கொண்டார். ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபா என்ற விலையை நிர்ணயிக்கக் கோரி இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட பிரதேச விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தி நடத்தினர்.

மேலும் படிக்க | கௌரவமான அரசியல் தீர்வு தேவை!- இலங்கையில் போராட்டம்...

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் விவசாயிகளின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அதோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேற்கு பொலன்னறுவை தொகுதியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான தம்ம சிறிசேன ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நீடித்ததுடன், இப்போராட்டம் நிறைவடைந்ததை அடுத்து, அங்கிருந்த விவசாயிகளின் பிரதிநிதிகள் கருத்துகளை வழங்கினர்.

மேலும் படிக்க | பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை.. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா..!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இங்கு கருத்து வெளியிடுகையில், “நாடளாவிய ரீதியில் விவசாயிகள் எதிர்நோக்கும் பாரதூரமான அடக்குமுறை நிலைமை, விவசாயிகளின் பாரிய சோகம், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான அலை உருவாகியுள்ள இந்த வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திர விவசாயிகள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த விவசாயிகள் போராட்டம் இடம்பெற்றது. இது தொடர்பாக விவசாயிகள் முன்னணிக்கு நன்றி தெரிவித்தார்.

பின், இந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் பொலன்னறுவையில் மட்டுமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகளின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் எதிர்நோக்கும் அடக்குமுறை நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதற்காக எதிர்காலத்திலும் இவ்வாறான விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மாலத்தீவுக்குச் சென்ற படகு...நடுக்கடலில் நடந்த பயங்கரம்!