பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை.. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா..!

தொடரில் போட்டியிடும் 10 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்..!

பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை.. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா..!

8-வது ஐசிசி மகளிர் டி20:

8வது ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பைகிரிக்கெட் தொடர், தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

2 அணிகளாக பிரிப்பு:

தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் -1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் அணிகளும், குரூப்-2 பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

பிப்.12-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதல்:

இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை, வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும், பிப்ரவரி 15 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 18 ஆம் தேதி இங்கிலாந்து அணியையும், 20 ஆம் தேதி அயர்லாந்து அணியையும் எதிர்கொள்கிறது. இத்தொடரின் இறுதிப் போட்டியானது, பிப்ரவரி 26 ஆம் தேதி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது.