பூமியை விழுங்க தயாராகிறதா சூரியன்....ஆய்வு கூறுவது என்ன!!!

பூமியை விழுங்க தயாராகிறதா சூரியன்....ஆய்வு கூறுவது என்ன!!!

நட்சத்திர அமைப்புகளின் வாழ்க்கைச் சுழற்சியில் கிரகங்களை விழுங்கும் அல்லது அழிக்கும் செயல்முறை என்பது பொதுவானதே என ஆய்வாளர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

பூமியில் உயிர்களின் அடிப்படை ஆதாரமாக சூரியன் விளங்குகிறது.  சூரியன் அதனுடைய ஒளி மற்றும் வெப்பத்தை கதிர்வீசல் பூமியை வந்தடைய செய்கிறது.  இதனால் பூமியில் உயிரினங்கள் செழித்து வாழ்கின்றன.

தொடர்ந்து சூரியன் அதனுடைய எரிபொருளை செலவழித்து கொண்டே வந்தால் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  உலகின் ராட்சத நட்சத்திரம் அதன் அனைத்து எரிபொருள்களையும் தற்போது செலவ்ழித்து கொண்டே வருகிறது.  இது இப்படியே நடந்து கொண்டிருந்தால் 500 கோடி ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து சக்திகளையும் இழந்து ராட்சத அளவிலான சிவப்பு பந்தாக காட்சியளிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிவப்பு பந்து கருந்துளையாக மாறி விரைவில் புதன், வெள்ளி, பூமி கோள்களை விழுங்கும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

சூரியனில் ஹைட்ரஜன்மற்றும் ஹீலியம் வாயுக்கள் உள்ளன.  அவற்றில் ஹைட்ரஜனின் அளவு அதிகமாக உள்ளது.  ஹைட்ரஜன் இணைவு மூலமாக சூரியனில் ஆற்றல் உருவாக்கப்படுகிறது.  சூரியனில் ஹைட்ரஜனின் அளவு குறையும் போது அதன் பருமனளவு பல மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.  இதனால் சூரியனால் எளிதாக கோள்களை விழுங்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.  இதனால் சூரிய குடும்பத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்கு விழுங்கப்படும் கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்களால் புதிய குடும்பம் உருவாக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் போது பூமியை பொறுத்தவரை அது சூரியனால் விழுங்கப்படுமா என தெரியவில்லை ஆனால் நிச்சயமாக பூமி வாழ தகுதியற்றதாகி விடும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவை பெருமையடைய செய்த ஃபரிதாபாத்...!!!!