இந்தியாவை பெருமையடைய செய்த ஃபரிதாபாத்...!!!!

இந்தியாவை பெருமையடைய செய்த ஃபரிதாபாத்...!!!!

ஃபரிதாபாத்தில் 2,600 படுக்கைகள் கொண்ட அமிர்தா மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. சுமார் 6,000 கோடி ரூபாய் செலவில் 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை இது என்று கூறப்படுகிறது.

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, மத்திய அமைச்சரும், ஃபரிதாபாத் எம்பியுமான கிரிஷன் பால் குர்ஜார், அம்மா என்று அழைக்கப்படும் ஆன்மீக குரு மாதா அமிர்தானந்தமயி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 130 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

இதுவரை மொத்தம் ரூ.4,000 கோடி இதில் செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.  சுமார் 10 மில்லியன் சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த பகுதியில் ஒரு பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மட்டுமின்றி நான்கு நட்சத்திர ஹோட்டல், மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, துணை சுகாதார அறிவியல் கல்லூரி, மறுவாழ்வு மையம், நோயாளிகளுக்கான ஹெலிபேட் மற்றும் இன்னும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன், நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்காக 498 அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மாதா அமிர்தானந்தமயி தேவியின் சார்பாக 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமிர்தா மருத்துவமனைகள் சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகின்றன.

இதையும் படிக்க: சென்னையில் உயிரிழந்த குத்துசண்டை வீரர்.....காரணம் என்ன?