பொது இடத்தில் நடனமாடி சிறைத் தண்டனை பெற்ற ஜோடி!!!

பொது இடத்தில் நடனமாடி சிறைத் தண்டனை பெற்ற ஜோடி!!!

ஈரானில் பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு இளம் காதல் ஜோடி இருவர் நடனம் ஆடிள்ளனர்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஊழல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக கூறி இவர்கள் மீது ஈரான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. 

மேலும், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  உக்ரைனுக்கு உதவுவதிலிருந்து பின்வாங்கிய ஜோ பைடன்.... உக்ரைனின் நிலை என்ன?!!