உக்ரைனுக்கு உதவுவதிலிருந்து பின்வாங்கிய ஜோ பைடன்.... உக்ரைனின் நிலை என்ன?!!

உக்ரைனுக்கு உதவுவதிலிருந்து பின்வாங்கிய ஜோ பைடன்.... உக்ரைனின் நிலை என்ன?!!
Published on
Updated on
1 min read

உக்ரைனுக்கு எப் 16 போர் விமானங்கள் அனுப்பப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 11 மாதங்களைக் கடந்துள்ளது.  போரினால் டோனெட்ஸ்க் பகுதியில் பாக்முத், வூலெடார் மற்றும் பிற பிரிவுகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளது.  கடும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் தங்களுக்கு புதிய ஆயுதங்கள் வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்திருந்தார்.  இதனிடையே உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்புவதாக முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.

உக்ரைனுக்கு போர் விமானங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக வெளிப்படையாக அறிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com