தொடரும் பணிநீக்கங்கள்..... வீழ்ச்சியடைகிறதா மைக்ரோசாப்ட்?!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% என்பதை கணக்கிட்டால் அது 11,000 பணியாளர்களின் எண்ணிக்கையாகும்.

தொடரும் பணிநீக்கங்கள்..... வீழ்ச்சியடைகிறதா மைக்ரோசாப்ட்?!!

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு செய்வது தொடர்ந்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும்  50 % பணியார்களை பணிநீக்கம் செய்தது.  ட்விட்டர் மட்டுமின்றி அமேசான், மெட்டா, அலிபாபா, ஜொமெட்டோ என பல முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்து வருவது தொடர்கிறது.

அமேசான்:

ட்விட்டரின் பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து சமீபத்தில் அமேசான் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. 

மைக்ரோசாப்ட்:

ட்விட்டர், அமேசானைத் தொடர்ந்து தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 5% பேரை நீக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இதன் உண்மை நிலையை அறிய இயலவில்லை.

பணிபுரிவோர்:

ஜூன் 30, 2022 நிலவரப்படி, மைக்ரோசாப்ட்  நிறுவனத்தில் 2,21,000 முழுநேர ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.  இவர்களில் 1,22,000 பேர் அமெரிக்காவிலும்  99,000 பேர் சர்வதேச அளவிலும் பணிபுரிகின்றனர்.

பணிநீக்கம்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% என்பதை கணக்கிட்டால் அது 11,000 பணியாளர்களின் எண்ணிக்கையாகும்.  இத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டால் பொறியியல் துறை மற்றும் மனித வளத்துறை மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மவுனமாக...:

ஆட்குறைப்பு எண்ணிக்கைக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும்  மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் வழங்கவில்லை எனினும் ஆட்குறைப்பு செய்தி குறித்து வெளியான தகவலைக் குறித்து நிறுவனம் எந்த மறுப்பு செய்தியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு:

இதற்கு முன்னதாக அக்டோபர் 2022 இல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல பிரிவுகளில் சுமார் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த பணிநீக்க நடவடிக்கையால் மைக்ரோசாப்ட் ஷாப்பிங்மோடில் உள்ள 2,00,000 பணியாளர்களில் 1 சதவீதத்தை பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை 1 சதவீதத்திலிருந்து 5% ஆக உயர்ந்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   முடிவடைந்த சர்வதேச புத்தக கண்காட்சி..... முதலமைச்சரின் அறிவித்த திட்டங்கள்.....