
பாகிஸ்தானில் ஒரு மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
பெஷாவரில் உள்ள மசூதியில் ஏராளமான மக்கள் வழக்கம்போல் தொழுகைக்காக கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்த நிலையில், 46 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
150 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதோடு, மனித வெடிகுண்டாக ஒரு பயங்கரவாதி செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அமேசானை பின்பற்றும் பிலிப்ஸ்..... தோல்வியுறும் நிறுவனங்கள்.....