
கிருஷ்ணகிரி | முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை (OAP) வழங்கப்பட்டு வருகிறது.
முதியோர் உதவிதொகை பெறும் முதியவர் - மூதாட்டிகளுக்கு வருவாய்த்துறையினர் மூலம் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி,சேலை வழங்கப்பட்டு வருகிறது
மேலும் படிக்க | வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் போக்குவரத்து பாதிப்பு ...
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த கொம்மேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சினிகிரிப்பள்ளி கிராமத்தில் 30க்கும் அதிகமானோர் OAP பெற்று வரும்நிலையில் கிராம நிர்வாக உதவியாளர் முனிராஜ் முதியவர்களிடம் புத்தாடை பெற தலா 20 ரூபாய் லஞ்சமாக வசூலித்து வந்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்து அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் கிராம நிர்வாக உதவியாளரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். முதியோர் உதவித்தொகை பெறுவோரிடம் தலா 20 ரூபாய் லஞ்சத்தை திரும்ப கொடுக்க வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | ரூல்ஸ் போடற நீங்க அத ஃபாலோ பன்றீங்களா?