வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் போக்குவரத்து பாதிப்பு ...

வாணியம்பாடி அருகே புளியமரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வேரோடு சாய்ந்த புளிய மரத்தால் போக்குவரத்து பாதிப்பு ...
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக காலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றியமைக்கப்பட்டது.ஒரு மணி நேரத்துக்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர்  ஈடுபட்டனர்.

இதேபோல் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகம் அருகில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாலையில் சாய்ந்துள்ளது இதனை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறம் அப்புறப்பதினர். இதனால் வாணியம்பாடியில் இருந்து உதயந்திரம் செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com