வண்டலூரில் வேரோடு சாய்ந்த மரங்கள்... அமைச்சர் ஆய்வு...

நேற்று வீசிய சூறாவளி காற்றில் வண்டலூர் பூங்காவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

வண்டலூரில் வேரோடு சாய்ந்த மரங்கள்... அமைச்சர் ஆய்வு...

செங்கல்பட்டு | அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பூங்காவானது 2500க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. மேலும் பூங்காவில் பறவைகள் ஊர்வன வகைகள் நீர் நீளத்தில் வாழ்வான மீன்கள் பூச்சி வகைகள் விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் நேற்று வீசிய சூறாவளி காற்றின் விளைவாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருப்பதற்கு மேற்பட்ட மரங்கள் வேரோடு ச சாய்ந்துள்ளது. இதனால் இன்று உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் யாரும் இன்று அனுமதிக்கப்படவில்லை.

நேற்று நள்ளிரவு பெய்த கனமழை அதிகமாக காற்று வீசியதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளது. இதனை வனத்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் அவர்கள் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | அறுவடை நிலையில் இருந்த வாழைமரங்கள் மாண்டஸ் புயலால் சேதம் - விவசாயிகள் சோகம்