நீ என்னடா என்னைய வேலைய விட்டு எடுக்குறது.. நாங்க சொல்றோம் எங்களுக்கு இந்த வேலையே வேணாம் - கொதித்தெழுந்த ட்விட்டர் ஊழியர்கள்

நீ என்னடா என்னைய வேலைய விட்டு எடுக்குறது.. நாங்க சொல்றோம் எங்களுக்கு இந்த வேலையே வேணாம் - கொதித்தெழுந்த ட்விட்டர் ஊழியர்கள்

# ரிப்_ட்விட்டர் #குட்பை_ட்விட்டர் - ட்ரெண்டிங் ஆகும் ஹாஸ்டேக்

ட்விட்டரில் சமநிலை இல்லை, கருத்து சுதந்திரம் இல்லை, நாம் வேண்டுமானால் ஒரு சோஷியல் மீடியா ஆரம்பிக்கலாமா? வேணா.. வேணா.. நாமளே ஏன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிட கூடாதுனு விளையாட்டா கேக்க போய், அப்புறம் விளையாட்டு வினையான மாதிரி ட்விட்டரை வாங்கிட்டு தினமும் ஏதாச்சும் சர்ச்சையை கிளப்பிட்டு இருக்காரு நம்ம எலான் மஸ்க்.

கடந்த அக்டோபர் மாதம் உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை எலான் மஸ்க்  கைப்பற்றினார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே, பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்ததோடு, தலைமை செயல் அதிகாரி உட்பட கிட்டதட்ட பாதி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: ஆள விடுங்கப்பா.. ! கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைத்த எலான்..!

எலான் மஸ்க் தரும் அழுத்ததால்  ட்விட்டரை விட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதையடுத்து ட்விட்டர் அலுவலகங்களுக்கு புதிய ஊழியர்கள் வருவதை தடுக்கும் விதமாக தற்காலிகமாக அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டு போகலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நிறுவனத்தில் பணிப்புரிந்து வரும் நூற்றுக்கணக்கானோர் தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர். 

ஊழியர்கள் பெரும்பாலானோர் ராஜினாமா செய்துள்ள நிலையில் ரிப் ட்விட்டர் ( RIPTwitter )  என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை வரை ட்விட்டர் ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.