ஆள விடுங்கப்பா..! கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைத்த எலான்..!

உலகின் முன்னனி தொழிலதிபரும் டெஸ்லா நிறுவருமான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது முதல் ட்விட்டரில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ட்விட்டர்:
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ட்விட்டரும் ஒன்று. தங்களின் கருத்துகளை பகிரும் தளமாக ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
எலானின் ட்விட்டர்:
பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டர் எலானின் வசம் சென்றது. தனது டிவிட்டரில் கருத்து சுதந்திரம் முழுவதுமாக உண்டு என கூறி வருகிறார் எலான் மஸ்க்.
இதையும் படிக்க: இப்போது மனம் தளரக் கூடாது..! தலையின் ஆறுதலால் மனம் நெகிழும் சிவா..! என்ன நடந்தது?
மாதம் $8 கட்டணம்:
டிவிட்டர் நிறுவனம் இந்த வார துவக்கத்தில் மாத காட்டணமாக 8 டாலர் செலுத்தி புளூ டிக் பெறலாம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பின் வாங்கிய எலான்:
மாத கட்டணம் செலுத்தி பலரும் போலி கணக்குகளுக்கு புளூ டிக் வாங்கியுள்ளதால், பல பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. உதாரணமாக பார்மா நிறுவனமான Eli Lilly & Co பெயரில் திறக்கப்பட்ட கணக்கில் இன்சுலின் இலவசம் என அறிவிக்கப்பட்டது, இதனால் Eli Lilly & Co. தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து மன்னிப்பு கேட்டது. மேலும் போலியாக உருவாக்கப்பட்ட டெஸ்லா கணக்கில் இருந்து கார் பாதுகாப்புக் குறித்துக் கிண்டல் செய்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க தான் அறிமுகப்படுத்திய 8 டாலர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் எலான்.
வாங்கியவர்களின் கணக்குகள் என்ன ஆகும்?
8 டாலர் செலுத்தி புளூ டிக் வாங்கியவர்களின் கணக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது. போலியான கணக்குகளில் மட்டும் parody என்ற வார்த்தை சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முக்கிய கணக்குகளுக்கு official என்ற லேபிள் சேர்க்கப்பட்டுள்ளது.
We’re adding a “Parody” subscript to clarify
— Elon Musk (@elonmusk) November 11, 2022
ட்விட்டரில் வருமானம்?
ட்விட்டரை வாங்கியவுடன் சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கினார் எலான். ட்விட்டரை வருவாய் ஈட்டும் தளமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே மாத கட்டணம் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ட்விட்டர் திவலாகும் நிலைக்கு செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.