மதுபோதை பயணியை தாக்கிய நடத்துனரின் வீடியோ வைரல்...

மதுபோதை பயணியை தாக்கிய நடத்துனரின் வீடியோ வைரல்...
Published on
Updated on
1 min read

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் வாலிபர் ஒருவர் பேருந்தில் ஏறி கண்டக்டர் இடம் ஈரோடு செல்லுமா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளிக்காமல் கோபப்பட்ட கண்டக்டர் மது போதையில் இருந்த அந்த வாலிபரை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டதுடன் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அவரை அடித்தும் அவமானப்படுத்திய சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் தனது மொபைலில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. மேலும், மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com