தலைநகரில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்... நட்பில் கூட பாதுகாப்பு இல்லாத அவலம்...

தலைநகரில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்... நட்பில் கூட பாதுகாப்பு இல்லாத அவலம்...

நட்பை முறித்ததால் கத்தியால் பல முறை தாக்கிய கொடூரம்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்...
Published on

தலைநகர் டெல்லியில் பல வகையான ஒடூரங்கள் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் பெண்களுக்கு இந்திய தலைநகரில் பாதுகாப்பு இல்லை என்பது தான் யாராலும் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண்ணை விபத்துக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, அந்த பெண்ணின் உடலை சுமார் 13-14 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று, அந்த பெண்ணின் உடல் அடையாளம் அறியாத வகையில் கண்டெடுக்கப்பட்ட கொடூரம் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், மேலும் ஒரு குற்றச் சம்பவம் அனைவரது மனதையும் புண்படுத்தியுள்ளது.

டெல்லி, ஆதர்ஷ் நகர் பகுதியில் பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர் பட்டப்பகலில் கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சுக்விந்தர் என்ற நபர், அவரது பெண் தோழியுடன் சென்றபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பெண்ணை சுக்விந்தர் 3 முதல் 4 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுக்வீந்தரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com