குதிச்சுடு டா கைப்புள்ள!!!- நொடி பொழுதில் உயிர்தப்பிய வைரல் வீடியோ!

வாகன ஓட்டுநர் குதித்து நூலிழையில் உயிர் தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குதிச்சுடு டா கைப்புள்ள!!!- நொடி பொழுதில் உயிர்தப்பிய வைரல் வீடியோ!
Published on
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே குன்னத்தூர் கிராமத்தில் இருந்து கிளியூர் செல்லும் சாலையில் நடுவில் சிறுபாலம் கட்டும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

சிறுபாலம் கட்டுமானப் பணியின் போது கலவை இயந்திரம் எதிர்பாராத நேரத்தில் பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளான போது, கலவை வாகனம் பள்ளத்தில் சாய்வதற்கு முன்பே அதன் ஓட்டுனர் வாகனத்தில் இருந்து எகிரி குதித்து நூலிழையில் உயிர்  தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தப் பணியில் சிமெண்ட் கலவையை கொண்டு வந்த வாகனம் பணி நடைபெறும் இடத்தில் சிமெண்ட் கலவை கொட்டுவதற்காக அதன் அருகில் நின்று கொண்டிருந்தது. அப்பொழுது, திடீரென மண் சரிவு ஏற்பட்டு அந்த வாகனம் சிறுபாலம் அமைக்கும் பள்ளத்தில் திடீரென தலைகீழாக கவிந்து விபத்துக்குள்ளானது.

அப்போது, கலவை வாகனம் சாய்வதற்கு முன்பு அதன் ஓட்டுனர் வாகனத்திலிருந்து எகிரி குதித்து  பள்ளத்தின் நடுவே விழுந்தார். பின்னர், அக்கம்பக்கத்தில் ஓடிவந்து பள்ளத்தில் சிக்கிக்கொண்டவரை பத்திரமாக மீட்டனர். அவர்  சிறுகாயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக நூல்ழியில்  உயிர் தப்பினர். கலவை வாகனம் பள்ளத்தில் சாய்வதற்கு முன்பு அதன் ஓட்டுனர் எகிரி குதித்து உயிர்தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com