நட்டநடு சாலையில் அங்கபிரதட்சணம் செய்த நித்தியானந்தா.. தரமான சாலை கோரி இந்த போராட்டம்..!

குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால் ஏற்படும் விபத்துகள்..!

நட்டநடு சாலையில் அங்கபிரதட்சணம் செய்த நித்தியானந்தா.. தரமான சாலை கோரி இந்த போராட்டம்..!

நூதன போராட்டம்:

கர்நாடகாவில், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஒருவர் சாலையில் அங்கபிரதட்சணம் செய்து நூதன போராட்டம் நடத்தியுள்ளார். 

விட்டு விட்டு பெய்யும் மழை:

கர்நாடகாவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

அங்கபிரதட்சணம்:

சமீபத்தில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துக்கு சாலை பள்ளங்களே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தநிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி உடுப்பியில்,  சமூக ஆர்வலர் நித்யானந்தா ஒலக்காடு என்பவர்  சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்துள்ளார்.