இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்... வீடியோ வைரல்...

இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்... வீடியோ வைரல்...

கபடி போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மதுரை | உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் கிராம இளைஞர்களுக்கான கபடி போட்டி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது., இப்போட்டியின் போது எம்.எஸ்.புரம் கிராம இளைஞர்களுக்கும், மெய்யனுத்தம்பட்டி கிராம இளைஞர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகி அப்போதே சரி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று எம்.கல்லுப்பட்டி காமராஜர் மகால் அருகில் நின்றிருந்த எம்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், ராஜ்குமார் என்ற இரு இளைஞர்கள் மீது மெய்யனுத்தம்பட்டியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதனால் படுகாயமடைந்த விஜயன் மற்றும் ராஜ்குமார் என்ற இருவரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலிசார் சந்தனதங்கம், செல்வம், முத்துகிருஷ்ணன், வனராஜா உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்களை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com