ஓசி டிக்கெட் போயிட்டு போயிட்டு வருவியா -மூதாட்டியிடம் கேள்விகேட்ட நடத்துனர் - பணியிடை நீக்கம் செய்த போக்குவரத்துதுறை

காசு ஓசி என்றால் பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா என மூதாட்டியை நடத்துனர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
ஓசி டிக்கெட் போயிட்டு போயிட்டு வருவியா  -மூதாட்டியிடம் கேள்விகேட்ட நடத்துனர் - பணியிடை நீக்கம் செய்த போக்குவரத்துதுறை
Published on
Updated on
1 min read

ஓசி டிக்கெட் அமைச்சர் பேச்சு :

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு ஒசி டிக்கெட் கொடுத்துருக்கிறோம் என   உயர்கல்வித்துறை  அமைச்சர்  பொன்முடி  பேசியிருந்தார். ஒசி டிக்கெட் என சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. இதை அரசியலாக்கப்பார்த்த அதிமுகவினர் மூதாட்டி ஒருவரை பயன்படுத்தி நீங்க ஒசி டிக்கெட்ன்னு சொன்னதுனால் நான் டிக்கெட் வாங்கிதான் போவேன் என அடம் பிடித்த மூதாட்டியை விசாரித்ததில் அதிமுகவினர் தூண்டுதல் வேலை என கண்டுபிடிக்கப்பட்டும் அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூதாட்டியை கண்டித்த நடத்துனர்

தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்துள்ளார். இது குறித்து அவர் மூதாட்டியிடம் காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி காசு ஓசி என்று நான் போகவில்லை என்றும், ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறாய், நான் மாலை போட்டு உள்ளேன் கோபமா பேசுகிறாய் என பரிதாபமாக கேட்கிறார் இந்த காட்சிகளை அங்கு இருந்த சகப் பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

பணியிடை நீக்கம்

இந்த காட்சிகள் வெளியானதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளர், மானங்கோரையை சேர்ந்த நடத்துனர் ரமேஷ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com