பண்டிகை காலங்களில் அரசியல்வாதிகளை ( சின்ராச கையில பிடிக்க முடியாது ) போட்டி போட்டு தேதிகளை அறிவிக்கும் கட்சியின் தலைமை
டிசம்பர் 25 ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மக்கள் ரெடியாகி வரும் வேளையில் அரசியல் கட்சிகளும் ரெடியாகி வருகின்றனர்

ஆவின் கேக்குடன் பண்டிகை
பண்டிகைகாலங்களை கிறிஸ்துமஸ் புத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திமுக அரசின் சார்பில் ஆவின் பொருட்களில் ஆவின் கேக் வகைகளை அறிமுகம் செய்தும் பண்டிகைகளை ஆவின் கேக்குகளுடன் கொண்டாடுவோம் என கூறினார் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்தார். திமுகவின் அமைச்சரான செஞ்சி மஸ்தான் டிசம்பர் 16 தேதி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
பாஜக சார்பில் 18 தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
தமிழக பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜ கட்சி நடத்தும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வரும் 18ம்தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்று மாணவர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்குகிறார். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், நாகூர் தர்கா ஷாகிப் காதிரி, டக்டர் நாகூர் கலிபா, கேப்கான் இந்திய ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் ஜெய்சிங், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். கட்சியின் மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், சிறுபான்மை அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அனைத்து மதங்களையும் சார்ந்த 500 மாணவர்களுக்கு தலா ரூ.5000 வீதம் ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் பேத்தி தேவன்யா குழுவினரின் கதக் நடன நிகழ்ச்சியும், பிரபல பரதநாட்டிய கலைஞர் மணி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தமிழக பாஜ கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி தங்கையா, துணை தலைவர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க |பழனிசாமியிடம் பல கேள்விகளுக்கு பதில் கேட்ட முரசொலி
அதிமுக சார்பில் 19 தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் வருகின்ற திங்கள் கிழமை டிசம்பர் 19 தேதி 5 மணியளவில் சென்னை வானகரம் கிறிஸ் துமஸ் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென் டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க | ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிரவாக்த்தில் சிறந்த மாற்றத்தை உருவாக நிதிஆதாரம் உயர்த்தி வழங்கல்
இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள் ஆயர்கள் போதகர்கள் தோழமை கிறிஸ்தவ தலைவர்கள் அருட்தந்தையார் அருட்சகோதரிகள் கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
எனவே தலைமை கழக நிர்வாகிகள் மாவட்டக்கழக்ச்செயலாளர்கள் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கழக செய்தி தொடர்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கிறிஸ்துமஸ் கால அன்பைபகிர்ந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம் என எதிர்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.