ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மோதல்...வைரலான சிசிடிவி காட்சிகள்...

ராமநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மோதல்...வைரலான சிசிடிவி காட்சிகள்...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழியில் அனுப்ப கோரி பக்தர் ஒருவர் ஊழியரை தாக்கியதும் , ஊழியர்கள் திருப்பித் தாக்கும் சிசிடிவி காட்சிகள் பரவி வைரல் ஆகி வருகிறது.

ராமேஸ்வரம் : 

ராமநாதசுவாமி திருக்கோவிலில் நேற்று முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்துள்ளார். அவர் தனது தாயாரை சிறப்பு வழியில் அனுமதிக்குமாறு கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியரிடம் கேட்க சிறப்பு வழியில் செல்வதற்கான டிக்கெட் எடுத்து வந்தால் சிறப்பு தரிசனத்திற்கு அனுப்பப்படும் என ஊதியர்கள் தெரிவிக்க,ஊழியருக்கும் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .வாக்குவாதத்தில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த ராம்பிரசாத் என்பவர் 'முதலில் ஊழியரை தாக்கி உள்ளார் ஊழியர்கள் ராம் பிரசாத்தை தாக்க இருவருக்கும் இடையே கை கலப்பானது. 

மேலும் தெரிந்து கொள்ள ///  மாமல்லபுர சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி...ஏன் தெரியுமா?

இந்த காட்சி மூன்றாம் பிரகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து இருவரும் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க ,முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் வக்கீல் என்பதாலும் அவர் தரப்பு நியாயத்தை கோவில் காவல்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைக்க  அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை  நடத்தி காவல்துறை அதிகாரிகள் பேசி பின்பு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தெரிந்து கொள்ள ///  கச்சபேஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா... நேர்த்திக்கடன் செய்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்...