கச்சபேஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா... நேர்த்திக்கடன் செய்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்...

 கச்சபேஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா... நேர்த்திக்கடன் செய்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடை ஞாயிறு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.இரண்டுஆண்டுகள் கழித்து கொரோனா முழுகட்டுப்பாட்டுகள் விலகி ஞாயிறு திருவிழா தடையின்றி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் : 

 கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பலபிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் நோய்தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கிவருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர மாவினால் அகல்விளக்கு தயார் செய்து அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடைவிதித்து செயல்படுத்தியது. கடந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் ,தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து ,அறிவிப்பு பலகைகள் கோயில் முழுவதும் வைக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 7மணி முதலே சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன்பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் தெரிந்து கொள்ள ///  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா..! ஆலோசனை மேற்கொண்ட தலைமை செயலாளர்...!!

அதன்படி நவம்பர் மாதம் 20 மற்றும் 27 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4 , 11 மற்றும் 15 தேதிகளில் கடை ஞாயிறு விழா நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து 2023 ஜனவரி 6ஆம்தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடை ஞாயிறு விழாக்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதால் அதனை சுற்றியுள்ள சிறுவியாபாரிகள் அனைவரும் பயனடைவர் என்பதும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படும் ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் இக்கோவிலில் வந்து கடை ஞாயிறு விழாவில் தரிசனம் செய்வர்.

இந்தக் கடை ஞாயிறு விழாவையொட்டி காவல்துறை அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளும், திருக்கோயில் வளாகத்தில் இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்கள் பக்தர்களுக்கு தேவையான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும் ,விழா குறித்த அனைத்து ஏற்பாடுகளும் காவல்துறையினர் செய்துள்ளனர்.

மேலும் தெரிந்து கொள்ள ///  நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!