
கன்னியாகுமரி | நாகர்கோவில் அடுத்த உடையப்பன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மினி பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வடக்கு தாமரை குளத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளுடன் மினி பேருந்தை இயக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பறக்கை பகுதியில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் மினி பேருந்து திடீரென வழி மறித்தனர். இருசக்கர வாகனத்தை சாலையில் குறுக்கே நிறுத்திவிட்டு ரமேஷ் இடம் தகராறு செய்தனர். இதனால் பேருந்தில் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க | மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி தற்கொலை...
மேலும் ஓட்டுனரை கீழே இறங்குமாறு கூறிய அந்த வாலிபர்கள் தாக்க முயன்றனர்.இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.சிறிது நேரம் அங்கு நின்ற அந்த வாலிபர்கள் ஓட்டுநர் ரமேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ரமேஷ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடைய வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அராஜகத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.