”அட எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” இணையத்தில் வைரலாகும் மேக்கப் வீடியோ!

”அட எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” இணையத்தில் வைரலாகும் மேக்கப் வீடியோ!

52 வயது சந்திரிகா அக்காவை 25 வயது இளம்பெண் ஆக மாற்றிய மேக்கப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒருவரின் தோற்றத்தை சில மணி நேரங்களில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ஒப்பனை கலைஞர்கள். எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட என்பது போல ஒருவரின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியமைத்து வயதானவர்களை கூட இளம் வயதினர் போல காட்சியளிக்க வைப்பார்கள். 

இதையும் படிக்க : ரீல்ஸ் அட்ராசிட்டிஸ்...சினிமா பாணியில் இளம்பெண்ணை தூக்கி சென்ற இளைஞர்! முகம் சுழிக்க வைத்த காதலர்!

அதனை போன்று, கேரள மாநிலத்தில் 52 வயது சந்திரிகா அக்காவை 25 வயது இளம்பெண் ஆக மாற்றிய மேக்கப் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஜின்சி ரெஞ்சு என்ற பெண் அவரது வீட்டில் பணி புரியும் 52 வயதுடைய சந்திரிகா என்பவரை, நாலு மணி நேரம் மேக்கப் செய்து 25 வயது மணப்பெண்ணாக மாற்றியுள்ளார். இதனை ஜின்சி ரெஞ்சு வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளார். அட 52 வயது அக்காவா இது என்பது போல காட்சியளிக்கிறார் சந்திரிகா. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகின்றது.