மனைவி ஒப்புதலுடன் காதலியை திருமணம் செய்த கணவர் தலைமறைவு!

மனைவியின் ஒப்புதலுடன், தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்ட கணவர், தற்போது திடீரென மாயமானார்.

மனைவி ஒப்புதலுடன் காதலியை திருமணம் செய்த கணவர் தலைமறைவு!

திருப்பதி: கணவரே கண்கண்ட தெய்வம் என கூறும் கதைகள் அந்த் அகாலத்தில் என்ற கூற்று போக, சமீபத்தில், தனது கணவர் முன்னாள் காதலியுடன் சேரக் கோரி கேட்டதால், இருவருக்கும் தானே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும் படிக்க | பள்ளி மாணவியை கடத்திய அசாம் இளைஞர்..! மடக்கி பிடித்த போலீசார்..!

திருப்பதியின் டக்கிலி- அம்பேத்கார் நகரைச் சேந்தவர் கல்யாண். சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், தனது வீடியோக்களை டிக்டாக் மற்றும் ரீல்சில் போடுவது வழக்கமாக வைத்திருந்தார். அப்படி முன்பு செயல்பாட்டில் இருந்த டிக்டாக் செயலியில் வீடியோக்கள் பதிவிடும் போது, நித்யஸ்ரீ என்ற பெண்ணோடு அறிமுகம் ஆனார் கல்யாண்.

காதலாக மாறிய அந்த உறவு, சில பல காரணங்களால் இருவரது காதலும் திருமணத்தில் முடியாமல் போனது. பின், அவர்கள் இருவரும் பேச்சு வார்த்தையில்லாமல் போக, சில நாட்களுக்குப் பிறகு, கல்யாண், விமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

மேலும் படிக்க | மருமகளை கொலை செய்த மாமனார்.. ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டியதால் நடந்த விபரீதம்..!

இந்நிலையில், மீண்டும் திருமணத்திற்கு பிறகு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட கல்யாண் குறித்து தகவல் அறிந்து வந்த அவரது முன்னாள் காதலி நித்யஸ்ரீ, அவரது மனைவி விமலாவைச் சந்தித்து தங்களது காதல் குறித்து எடுத்துக் கூறியுள்ளார். எப்படியாவது உங்கள் கணவரை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் என கதறி அழுத நிலையில், தனது கணவரை திருமணம் செய்து வைத்தார் விமலா.

இருவருக்கும், கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த விமலா, இருவரது திருமணத்திற்கு பிறகு, வேறு வீட்டில் இருக்க மாட்டேன் எனவும், அவர்கள் இருவருடன் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கி தான், கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதியன்று, திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | இவள் தென்னிந்திய ஏஞ்சலீனா ஜோலி! - நயனை மெச்சிய விக்கி!

இந்த சம்பவம், சோசியல் மீடியாக்களிலும் பெரிதாக பரவபட்டு பெரும் பேசுபொருளாகியது. இந்நிலையில், மூன்று பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இரண்டு மனைவிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால், தற்போது கணவன் தலைமறைவாகி இருக்கின்றார்.

இது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.