காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால்... நெற்பயிா் அறுவடை பாதிப்பு...கவலையில் விவசாயிகள்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழையால்... நெற்பயிா் அறுவடை பாதிப்பு...கவலையில் விவசாயிகள்!
Published on
Updated on
1 min read

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. 

தமிழ்நாட்டில் பரவலாக பெய்த மழை :

கரூர் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீா்த்தது. இதனால் நகா் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மிதந்தபடி சென்றனர். 

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை என விவசாயிகள் வேதனை தொிவித்துள்ளனா்.

இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் அருமடல் கிராமத்தில் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்த அலமேலு என்பவா் மின்னல் தாக்கி உயிாிழந்த சம்பவம் பாிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாா் விசாாித்து வருகின்றனா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com