தஞ்சை: பரவலாக பெய்த மழை...குஷியான பொதுமக்கள்!

தஞ்சை: பரவலாக பெய்த மழை...குஷியான பொதுமக்கள்!

Published on

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

பரவலாக பெய்த மழை:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று திடீரென திருவையாறு, கண்டியூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி:

இதேப்போன்று,  திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் தாலுக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொரடாச்சேரி ஒன்றியம் மற்றும் என்கண், திருக்கண்ணமங்கை, புதுக்குடி, அரசவனங்காடு, நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  மிதமான மழை பெய்தது. இதனால் அங்கு இதமான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், கோண்டூர், சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், காலை முதல் தற்போது வரை பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com