ஈரோடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் யார்?!!!

ஈரோடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் யார்?!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு 30ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே காலம் உள்ள நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம். எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அமைத்ததுடன், பூத் கமிட்டி மற்றும் இடைத்தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”ஓபிஎஸ் அணி என்பது கட்சி அல்ல.....” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!!