“ஆளுநர் தமிழ்நாடு என கூறுவது மக்களின் வெற்றி” - அமைச்சர் ரகுபதி...

தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் பயன்படுத்தி வருவது தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

“ஆளுநர் தமிழ்நாடு என கூறுவது மக்களின் வெற்றி” - அமைச்சர் ரகுபதி...

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் தமிழக செய்தி மக்கள் தொலைதொடர்பு துறை சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் ரகுபதி பேட்டி அளிக்கையில், “ஆளுநருக்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு என்று ஆளுநர் பேசியிருப்பது தமிழக அரசுக்கும் தமிழக மக்களின் உணர்வுக்கும் கிடைத்த வெற்றி.” என பேசினார்.

மேலும் படிக்க | தமிழின் சிறப்பு பலருக்கும் தெரியல்...தமிழ்நாடு ஒரு சிறந்த இடம்...அறிவுரை வழங்கிய ஆளுநர்!

மேலும் சட்டத்துறை அமைச்சர் இருக்கும் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமையுமா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டபோது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தற்போது அமைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் புதுக்கோட்டையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்குடியில் சட்டக் கல்லூரி அமைக்கப்படுவதால் வருகின்ற நிதிநிலை அறிக்கையில் வாய்ப்பில்லை” என பேசினார்.

மேலும் படிக்க | பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தான்...மிசோரம் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும்...ஆளுநர் சொன்னது தகவல்!