பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தான்...மிசோரம் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும்...ஆளுநர் சொன்னது தகவல்!

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தான்...மிசோரம் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும்...ஆளுநர் சொன்னது தகவல்!

சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கலந்துரையாடினர்.

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் கலந்துரையாடல் :

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள (பேட்ச் 8, பேட்ச் 9)-ஐ சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

பிரிட்டிஷ் ஆட்சி தான் காரணம் :

அப்போது, நாகாலாந்து நாட்டில் உங்கள் பணி அனுபவம் எப்படி இருந்தது என்று ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், நாகாலாந்தில் மிசோரம் சார்ந்த மக்கள் நாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற மன நிலையை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு வரை இந்திய மக்களும் நாகாலாந்து மக்களும் இணக்கமாக தான் இருந்தனர். அரசியல் ரீதியாக தான் மாற்றங்கள் இருந்தன. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் நாகாலாந்து மக்கள் நாங்கள் இந்திய நாட்டுடன் இணைந்தவர்கள் இல்லை. இந்தியாவுடன் இணைத்தால் நாங்கள் பன்றி, மாட்டு இறைச்சி உண்ணுவதில் தடை ஏற்படும் என தெரிவித்தனர். 

இதையும் படிக்க : குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில்...ஆளுநர், முதலமைச்சர் வருவது போல நடந்த ஒத்திகை!

அதிகரித்த பிரிவு :

இந்த வேறுபாட்டின் காரணமாக சுதந்திர போராட்டத்தில் கூட அவர்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்படவில்லை. இரண்டு எல்லைகளுக்கும் தாண்டி செல்ல பாஸ் முறை ஏற்படுத்திய பின்பு பிரிவு என்பது அதிகரித்தது. இதனால் அமைதி பேச்சுவார்த்தைக் கூட வேறு நாட்டில் தான் நடைபெற்று வந்தது.

அந்தசமயம் நாங்கள் இந்த பிரச்சனையை பேச ஆரம்பித்தபோது, இந்தியாவில் டெல்லியில் தான் பேச்சுவார்த்தை நடைபெறும் அதற்கு ஒப்புக் கொண்டால் மேற்கொண்டு பேசலாம் என்று தெரிவித்தோம். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தானதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.