அருணா ஜெகதீசன் ஆணையத்தின்படி நெல்லை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்...!

அருணா ஜெகதீசன் ஆணையத்தின்படி நெல்லை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்...!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, பணியிலிருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை, கடந்த 18 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்:

இந்த அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் திருநெல்வேலியில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் உதவி ஆணையராக செயல்பட்டு வரும் நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.