ஈபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது...ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு!

ஈபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது...ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு!

இபிஎஸ் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

இடைக்கால மனுத் தாக்கல் :

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது கையொப்பத்துடன் கூடிய வேட்பாளரின் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாகவும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவுவதால் இதுதொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ. பன்னீர்செல்வமும், தலைமைத் தேர்தல் ஆணையமும் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

இதையும் படிக்க : அண்ணா நினைவுதினம்.... நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி!!!

அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ்-யின் மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இன்று வெளியாகுமா தீர்ப்பு :

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனு மீதான தீர்ப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.