தீபாவளி: வாகனங்களால் திக்கித் திணறும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை...!

தீபாவளி: வாகனங்களால் திக்கித் திணறும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை...!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் திக்கித் திணறி வருகிறது.

அதிகரித்த போக்குவரத்து நெரிசல்:

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட விரும்பும் மக்களுக்கு, தமிழக அரசு சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் இருந்து, பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால், புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.

இதையும் படிக்க: அக்டோபர் 25 பகுதி சூரிய கிரகணம் - வானில் ஒரு தீபாவளி !

திக்கித் திணறும் தேசிய நெடுஞ்சாலை:

இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அரசு பேருந்து மட்டுமின்றி, தனியார் பேருந்துகள், கார், வேன், இருசக்கர வாகனங்களும் அதிகரித்ததால், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாகனங்கள் நீண்ட தூரம் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாகனங்களின் பெருக்கதால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை திக்கித் திணறி வருகிறது.