விஞ்ஞான பூர்வமான விதிமுறை தான் ஒரு நாட்டிற்கு உலக பொருளாதாரத்தில் பலன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடி மீயூசியத்தில் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஞ்ஞான பூர்வமான விதிமுறை தான் ஒரு நாட்டிற்கு உலக பொருளாதாரத்தில் பலன் என்று தெரிவித்தவர், இம்மாத ஜிஎஸ்டி நிலுவை தொகை 4 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், எல்லா வரியையும் மத்திய அரசு பெற்று கொண்டு, பின்னர் பகிர்ந்து அளிப்பது முறை இல்லை என தெரிவித்த நிதியமைச்சர், ஜிஎஸ் டி செயல்பாட்டை இன்னும் சிறப்பாக முன்னேடுக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தார்.