பக்தர்களின் வரவேற்பை பொறுத்தே...மானியத்தை அதிகரிக்க முயற்சி - அமைச்சர் சேகர்பாபு!

பக்தர்களின் வரவேற்பை பொறுத்தே...மானியத்தை அதிகரிக்க முயற்சி - அமைச்சர் சேகர்பாபு!
Published on
Updated on
1 min read

காசி ஆன்மீக பயணத்தில் பக்தர்கள் வரவேற்பை பொறுத்து, அரசின் மானியத்தை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.

மாநில அரசு ஏற்பாட்டில் காசிக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று சென்னை திரும்பிய பக்தர்களை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காசிக்கு புனித யாத்திரை செல்வதற்காக 50 லட்சம் நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டில் மொத்தம் 200 பேர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 66 பக்தர்கள் சென்று திரும்பிய நிலையில், இரண்டாம் கட்ட பயணம் வருகிற மார்ச் 1 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட பயணம் 8 ஆம் தேதியும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்துவிட்டு செல்லமுடியாத பக்தர்கள் முன்னுரிமை அடிப்படையில்  அடுத்தடுத்து அழைத்துச்செல்லப்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து, காசி தமிழ் சங்கம் போட்டியாக திமுக இந்த ஆன்மீகப் பயணம் தொடங்கியதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது யாருக்கும் போட்டி கிடையாது என்று கூறியவர், தமிழக அரசுக்கு போட்டியாக தான் இந்த காசி தமிழ் சங்கமத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, காசி ஆன்மீக பயணத்தில் பக்தர்கள் வரவேற்பை பொறுத்து, அரசின் மானியம் பெற்று எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com