காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்க வேண்டும்...நாதக வேட்பாளர் மேனகா வலியுறுத்தல்!

காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்க வேண்டும்...நாதக வேட்பாளர் மேனகா வலியுறுத்தல்!

தேர்தல் ஆணையம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா குற்றம் சாட்டியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிக்க : இஸ்லாமிய கூட்டமைப்பிடம் ஆதரவு திரட்டிய திமுக அமைச்சர்கள்...!

இப்படி பிரசாரம் செய்வதில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 20-ம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமரத்தெருவில் பிரசாரம் மேற்கொண்டதாக மேனகா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மேனகா , தேர்தல் ஆணையம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு,  பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.  மேலும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.