இஸ்லாமிய கூட்டமைப்பிடம் ஆதரவு திரட்டிய திமுக அமைச்சர்கள்...!

இஸ்லாமிய கூட்டமைப்பிடம் ஆதரவு திரட்டிய திமுக அமைச்சர்கள்...!
Published on: 
Updated on: 
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக அமைச்சர்கள் இஸ்லாமிய கூட்டமைப்பு சங்கத்திடம் ஆதரவு திரட்டினர். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. 25-ம் தேதி மாலையோடு பிரசாரங்கள் நிறைவடைய இருப்பதால், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸை சேர்ந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் பலரும் நாள்தோறும் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அந்த வகையில், இன்று திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான், ஏ.வ.வேலு, முத்துசாமி ஆகியோர் இஸ்லாமிய கூட்டமைப்பின் சங்கத்திடம் ஆதரவு கோரினர். அப்போது, திமுகவின் இரண்டாண்டு சாதனைகளை பட்டியலிட்ட அமைச்சர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com