திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா..! ஆலோசனை மேற்கொண்ட தலைமை செயலாளர்...!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா..! ஆலோசனை மேற்கொண்ட தலைமை செயலாளர்...!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். 

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்விற்கு லட்சக்கணகான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் காவல் உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், போக்குவரத்து மாற்றங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

--சுஜிதா ஜோதி 

இதையும் படிக்க : கோலாகலமாக இன்று தொடங்கும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி...!